'மறக்க முடியாத தருணம்': மாற்றுத்திறனாளி ஓவியருடன் மோடியின் சந்திப்பு அனுபவம் 
இந்தியா

'மறக்க முடியாத தருணம்': மாற்றுத்திறனாளி ஓவியருடன் மோடியின் சந்திப்பு அனுபவம்

ஓவியர் ஆயுஷ் குண்டலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். மாற்றுத்திறனாளியான ஓவியருடனான சந்திப்பு ‘மறக்க முடியாத தருணமாகும்’ என்று பிரதமர் மோடி சுட்டுரையில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ANI

புது தில்லி: ஓவியர் ஆயுஷ் குண்டலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். மாற்றுத்திறனாளியான ஓவியருடனான சந்திப்பு ‘மறக்க முடியாத தருணமாகும்’ என்று பிரதமர் மோடி சுட்டுரையில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

மேலும், ஆயுஷ் குண்டலின் ஓவியங்களை காணுமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது; “ஆயுஷ் குண்டலை @aayush_kundal சந்தித்தது எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது. ஆயுஷ் தமது உணர்வுகளை கால்விரல்களால் ஓவியமாக்கி வடிவமைப்பதில் அவரின் தேர்ச்சி அனைவரையும் ஈர்ப்பதாகும். நான் ஈர்க்கப்பட்டதால் அவரது சுட்டுரையை பின்தொடர்கிறேன்”

“ஆயுஷ் குண்டலின் @aayush_kundal ஓவியங்களைக் காணுமாறு உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். ஆயுஷ் உருவாக்கியுள்ள அவரது ஓவியத்திற்கான யுடியூப் பக்கத்தில், அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை காட்டுவதாக உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT