முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆப்கனில் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அப்துல் வஹாப் லார்க் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதா தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 25 மார்ச், 2022 at 2:31 PM
பகிர்:

பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அப்துல் வஹாப் லார்க் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த வஹாப், ஆப்கனில் செவ்வாயன்று காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

வஹாப் லார்க், ஹக்கீம் அலி ஜான், ஹக்கீம் சலே, குஷி முஹம்மது, ஜிப்சி காந்தஹார் ஆகிய தீவிரவாதிகள் பலவித பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவார். 

Advertisement

உயிரிழந்த தீவிரவாதி தொடக்கத்தில் லஷ்கர்-இ-ஜாங்வி உஸ்மான் சைபுல்லா குர்த் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆகஸ்ட் 2020இல் தனது மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து தெஹ்ரிக்-இ-தலிபான்-யில் சேர்ந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர், தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.