முகப்பு
இந்தியா

பாட்னாவில் சாலை விபத்து: 4 பெண்கள் பலி

பிகாரின் சரண் மாவட்டத்தில் லாரி மோதி நான்கு பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

Updated On : 26 மார்ச், 2022 at 5:17 PM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரின் சரண் மாவட்டத்தில் லாரி மோதி நான்கு பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

தும்டுமா கிராமத்தில் உள்ள மஷ்ராக்-மல்மாலியா மாநில நெடுஞ்சாலையில் வெள்ளி இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து மஷ்ராக் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், 

Advertisement

பெண்கள் வீட்டிற்கு வெளியே திருமண சடங்குகள் செய்துகொண்டிருந்தபோது. அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. அவர்களில் 3 பேர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். 

காயமடைந்தவர்கள் மஷ்ராக்கில் உள்ள பொது சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.