இந்தியா

மேற்கு வங்க வன்முறையில் 21 பேர் குற்றவாளிகள்: சிபிஐ அறிக்கை

மேற்கு வங்க வன்முறை தொடர்பாக 21 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வன்முறை நடைபெற்ற ராம்புராட் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

மேற்கு வங்க வன்முறை தொடர்பாக 21 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வன்முறை நடைபெற்ற ராம்புராட் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை (மார்ச் 21) இரவு கொலை செய்யப்பட்டாா். 
 
இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள், பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

இந்த வன்முறைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பிர்பூம் வன்முறை தொடர்பாக ராம்புராட் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் தற்காலிக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த அதிகாரி அகிலேஷ் சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் 21 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

ராம்புராட் கலவரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 7ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT