முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் பேருந்தும்-காரும் மோதி விபத்து: 5 பேர் பலி

தெலங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டத்தில் பேருந்தின் டயர் வெடித்து கார் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டத்தில் பேருந்தின் டயர் வெடித்து கார் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மச்சாரெட்டி மண்டலத்தின் கான்பூர் கிராமத்திற்கு அருகே பேருந்து எதிர் திசையில் வந்த கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரிலிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு குழந்தை படுகாயமடைந்தது. பேருந்து டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது எதிரே வந்த கார் மீது பேருந்து மோதியதில், கார் மரத்தில் மோதியது. 

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் குழந்தையும் அடங்கும். காயமடைந்த மற்றொரு குழந்தை உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 

காமரெட்டி பக்கத்திலிருந்து கரீம்நகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்தில் பலியானவர்கள் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →