இந்தியா

நாட்டில் மேலும் புதிதாக 1,259 பேருக்குத் தொற்று: 1,705 பேர் குணமடைந்தனர்

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 1,259 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,21,982 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,070-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 1,705 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,85,534 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 15,378 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

கரோனாவால் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.47 சதவிகிதமாகவும், வராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 0.25 சதவிகிதமாகவும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.22 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 
 
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 183.53,90,499 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 25,92,407 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 78,79,32,913 (78.7 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,77,559 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய 12-14 வயதுடைய இளம் பருவத்தினருக்கான கரோனா தடுப்பூசி இயக்கத்தில், இதுவரை 1.36 கோடிக்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT