புதுதில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.