முகப்பு
இந்தியா

எரிபொருள் விலை உயர்வு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கெதிராக நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கெதிராக  காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தில்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ’கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 9 முறை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்த பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது’ என செய்தியாளர்களிடம் கூறினார்.

'எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →