இந்தியா

மது அருந்த ரயிலை ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்த ஓட்டுநர்

பிகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஓட்டுநர் ஒருவர் குடிப்பதற்காக ரயிலை ஒருமணிநேரம் நிறுத்தி வைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DIN

பிகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஓட்டுநர் ஒருவர் குடிப்பதற்காக ரயிலை ஒருமணிநேரம் நிறுத்தி வைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் சமஸ்திபூர் - சஹார்சா உள்ளூர் ரயில் ஒருமணிநேரம் தாமதமாகியும் புறப்படாமல் நின்றுள்ளது. அந்த ரயில் ஓட்டுநரும் மாயமாகியுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினர் ஓட்டுநரைத் தொடர்புகொள்ள முயன்றனர். அப்போது ரயில் ஓட்டுநர் குடித்து விட்டு வந்துள்ளார். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக சமஸ்திபூரிலிருந்து ரயில் இயக்கப்பட்டது. 

இதுகுறித்து பேசிய சமஸ்திபூர் ரயிவே மேலாளர் அலோக் அகர்வால், ரயில்வே ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

சமீபத்தில் தேநீர் குடிப்பதற்காக ரயிலை நிறுத்திவிட்டு சென்ற ரயில்வே ஓட்டுநரின் செயல் சிசிடிவி காட்சிகள் மூலம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT