இந்தியா

மகாராஷ்டிரத்தில் நக்சல்களுடன் மோதல்: காவலர் படுகாயம்

DIN

மகாராஷ்டிரத்தில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்களுடன் நடைபெற்ற மோதலில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 900 கி.மீ தொலைவில் உள்ள பாம்ராகாட்டில் உள்ள டோட்ராஜ் வனப்பகுதிக்கு அருகே, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் பிரிவான சி-60 கமாண்டோக்கள் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டது. 

வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். 

சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, நக்சல்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றதாக அதிகாரி கூறினார்.

இந்த மோதலில் காவலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பாம்ரகட் வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்தாண்டு நவம்பரில், கட்சிரோலியில் சி-60 கமாண்டோக்களுடன் நடந்த மோதலில் மூத்த பாதுகாப்புப் படை வீரர் மிலிந்த் டெல்டும்டே உள்பட 26 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT