ஜிக்னேஷ் மேவானி 
இந்தியா

ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறைதண்டனை: 2017ஆம் ஆண்டு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

2017ஆம் ஆண்டு பேரணி நடத்திய வழக்கில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

2017ஆம் ஆண்டு பேரணி நடத்திய வழக்கில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் அசாம் மாநில காவல்துறையினரால் கடந்த மாதம் 19-ஆம் தேதி குஜராத் சட்டப்பேரவை உறுப்பினரும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் பெற்ற நிலையில் காவலரைத் தாக்கியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானியை வெளியே விடக் கூடாது என்ற நோக்கில் காவல் துறை செயல்படுகிறது என்று நீதிமன்றம் கண்டித்து இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமின் வழங்கியது. 

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள மேஹ்சனாவிலிருந்து தனேரா நோக்கி பேரணி சென்றதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானி உள்பட்ட 10 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் தலைமறைவாகவும், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் எஞ்சிய 10 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT