இந்தியா

புல்லரிப்பு ஏற்பட்ட தருணம்: இஸ்ரேல் பயணம் குறித்து ஜெய்சங்கர் உருக்கம்

DIN

இந்தியா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான உறவு உண்மையிலேயே சிறப்பாக உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டது புல்லரிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும் அவர் விவரித்துளா்ளார்.

இஸ்ரேன் நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெய்சங்கர், "கடந்த பல ஆண்டுகளாக, நான் அங்கம் வகித்த இரு நாடுகளுக்கிடையேயான உறவை திரும்பிப் பார்க்கிறேன். 

குறிப்பாக, ஜூலை 2017ஆம் ஆண்டு இஸ்ரேலில் உள்ள டெல் அவிவுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டது எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்திய தருணம். அதன் பிறகுலிருந்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவு முன்னேற்றம் கண்டது" என்றார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இஸ்ரேல் உள்ளது என தெரிவித்த அவர், "இருநாடுகளுக்கிடையேயான அறிவுசார் உறவை விரிவுப்படுத்துவதில் இந்தியா, இஸ்ரேல் நாடுகள் கவனம் செலுத்திவருகின்றன. 

இந்த உறவின் எதிர்காலத்தை நான் பார்க்கையில், எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறிகளில் ஒன்றாக அறிவுசார் உறவு தெரிகிறது. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கிருந்து அங்கு செல்கின்றனர். ஆராய்ச்சி திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அடங்கிய புதிய குவாட் கூட்டமைப்பின் அம்சம் குறித்து பேசிய அவர், "இந்த கூட்டமைப்பு அந்த பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில், ஜெய்சங்கர் கலந்து கொண்டதற்கு 
இந்தியா, இலங்கை, பூடான் நாடுகளுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நோர் கிலோன் நன்றி தெரிவித்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT