பனாஜி: சமையல் எரிவாயு உருளை மற்றும் பால் விலை உயர்வு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் மனைவி சுலட்சனா சாவந்த் பதிலளித்துள்ளார்.
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனது கணவரும் கோவா முதல்வருமான பிரமோத் சாவந்த் வழக்கமாக அளிக்கும் பதிலான கவலைப்பட ஒன்றுமில்லை என்ற வாக்கியத்தை பதிலாக அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், விலைவாசி உயர்வை மக்கள் சற்று பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். உயர்ந்துவரும் பணவீக்கத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாநிலத்தில் மட்டும் எரிவாயு உருளை விலை உயர்த்தப்படவில்லை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் விலை உயர்வானது பொருந்தும். நாம் இதைப் பற்றி கவலைப்படக் கூடாது. சிறிது நாள்கள் இதனை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதிலிருந்து தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார் சுலட்சனா சாவந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.