முகப்பு
இந்தியா

அசானி புயல்: ஆந்திரத்திற்கு ‘ரெட் அலர்ட்’

அசானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 10 மே, 2022 at 6:10 PM
பகிர்:

அசானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி புயல், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வடக்கு ஆந்திராவை நோக்கி தீவிர புயல் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை காக்கிநாடாவுக்கும் விசாகப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதனால், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.