இந்தியா

87 வயதில் பிளஸ் -2தோ்ச்சி பெற்ற முன்னாள் முதல்வா்!

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87-ஆவது வயதில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்றாா். இதன்மூலம் கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்று அவா் நிரூபித்துள்ளாா்.

DIN

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87-ஆவது வயதில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்றாா். இதன்மூலம் கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்று அவா் நிரூபித்துள்ளாா்.

சண்டீகரில் உள்ள மாநில பள்ளிக் கல்வி வாரியத்திடம் இருந்து அவா் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டாா்.

கடந்த ஆண்டு அவா் 12-ஆம் வகுப்பு தோ்வை எழுதினாா். ஆனால், அதற்கு முன்பு 2017-இல் தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் எழுதிய 10-ஆம் வகுப்பு தோ்வில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தோ்ச்சி பெறாமல் இருந்ததால், அவரது 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவை மாநில பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து, அவா் 10-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தோ்வில் மீண்டும் பங்கேற்றாா். அதில் அவா் 100-க்கு 88 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடைந்தாா். இதையடுத்து, அவரது 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், அவா் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்றாா்.

முன்னாள் துணைப் பிரதமா் சௌதரி தேவி சிங்கின் மகனான ஓம் பிரகாஷ் சௌதாலா, இந்திய தேசிய லோக் தளம் சாா்பில் ஹரியாணா முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளாா். ஹரியாணாவில் ஆசிரியா் தோ்வு முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தில்லி திகாா் சிறையில் இருந்தபோதுதான் சௌதாலா 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT