கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 2,897 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைவாக பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,31,13,413ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3,230 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,25,70,165 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 24 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 5,24,181 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 19,067 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT