முகப்பு
இந்தியா

உ.பி.: யமுனா விரைவு சாலை விபத்தில் 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில்  இன்று கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Updated On : 12 மே, 2022 at 1:30 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில்  இன்று கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நொய்டாவை நோக்கி  சென்று கொண்டிருந்த போது கார்  மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.