இந்தியா

பேரக் குழந்தைகளா? ரூ.5 கோடியா? மிரட்டும் பெற்றோர்

DIN

திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் பேரக் குழந்தைகளை பெற்றுக் கொடுக்காத மகன் மற்றும் மருமகள் மீது ரூ.5 கோடி கேட்டு உத்தரகண்டைச் சேர்ந்த தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த சமுதாயம் இப்போது எப்படி சென்றுகொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த வழக்கு அமைந்திருப்பதாக, பெற்றோர் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் ஏ.கே. ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குத் தொடுத்த பிரசாத் கூறுகையில், என் மகனுக்கு 2016ஆம் ஆண்டு திருமணமானது. விரைவில் பேரக் குழந்தைகள் பிறக்கும் என்று நாங்கள் காத்திருந்தோம். பேத்தியோ பேரனோ எதுவாக இருந்தாலும் சரி.. ஒரு பேரக் குழந்தை வேண்டும் என்று கேட்கிறோம்.

இந்த ஆண்டுக்குள் ஒரு பேரக் குழந்தை பெற்றுக் கொடுக்காவிட்டால், எங்களுக்கு அவர்கள் தலா ரூ.2.5 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரசாத் கூறுகையில், நான் எனது மொத்த சேமிப்பையும் செலவிட்டு என் மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். இப்போது என்னிடம் பணமில்லை. கடன் வாங்கித்தான் வீடு கட்டினோம். கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே, அவர்கள் தலா ரூ.2.5 கோடி வழங்குமாறு மனு கொடுத்துள்ளேன் என்கிறார்.

இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில், பெற்றோர் அரும்பாடுபட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால், படித்து பெரியவர்களாகி கைநிறைய சம்பாதிக்கும் பிள்ளைகள், பெற்றோரின் அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். தற்போது பேரக் குழந்தைகளையாவது பெற்றுக் கொடுங்கள் இல்லையேல் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுங்கள் என்று பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT