கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

ஜம்மு காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த என்கவுண்டர் குறித்து ஜம்மு காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். இதன் மூலம் மொத்த பயங்கரவாதிகளின் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக காலையில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பந்திப்போராவின் அரகம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கடந்த புதன் கிழமை இரு பிரிவினருக்கும் இடையே சலிந்தர் காட்டுப் பகுதியில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன்  கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT