இந்தியா

தில்லியில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து

DIN

தேசிய தலைநகர் தில்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேற்கு தில்லியில் உள்ள 7/16 கீர்த்தி நகர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளில் அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அதிகளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

முதலில் துணிப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பிடித்ததாகவும். பின்னர் மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும், மூன்றாவது கடினமான பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தீ பரவியதாக உயர் அதிகாரி தெரிவித்தார். 

தீ விபத்தை முழுமையாக அணைத்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT