முகப்பு
இந்தியா

தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிலிருந்த இருவர் கைது

மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் இருவரை என்ஐஏ கைது செய்துள்ளனர்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் இருவரை என்ஐஏ கைது செய்துள்ளனர்.  

பணமோசடி மற்றும் தப்பி ஓடிய வழக்கில் தாவூத் இப்ராஹிமின் ‘டி’ கம்பனி தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான சோட்டா ஷகீலுடன் தொடர்பிலிருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தாவூத் இப்ராஹிமின் சகோதரா் இக்பால் காஸ்கா், அவரின் உதவியாளா் மும்தாஸ் எஸாஸ் ஷேக், இஸ்ராா் அலி ஜமீல் ஆகியோா் சுரேஷ் தேவிசந்த் மேத்தா என்ற கட்டுமான நிறுவனரிடம் இருந்து தாணேயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பலவந்தமாக வாங்கியுள்ளதாகவும் , ரூ.10 லட்சம் மதிப்பிலான 4 காசோலைகளையும் அவா்கள் சுரேஷிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளதாகவும் தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் தற்போது ரூ.55 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு  முடக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.