முகப்பு
இந்தியா

மனதின் குரல்: பிரதமர் என்ன பேச வேண்டும் என்று கருத்துச்சொல்ல ஒரு வாய்ப்பு

மே 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 13 மே, 2022 at 3:35 PM
மனதின் குரல்: பிரதமர் என்ன பேச வேண்டும் என்று கருத்துச்சொல்ல ஒரு வாய்ப்பு
பகிர்:


புது தில்லி: மே 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது உரையில் இடபெறவேண்டிய உள்ளீடுகளை பிரதமர்  நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வரும் 29-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனைவரும் உங்களது உள்ளீடுகளை பகிருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். 

Advertisement

NaMo App and MyGov செயலிகளில் உங்களது கருத்துகளை அனுப்புவதை நான் பார்க்கிறேன். உங்களது கருத்தை பதிவு செய்தும் 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.