இந்தியா

தில்லி தீ விபத்தில் பலி 30 ஆக உயர்வு!

DIN

தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். 12 பேர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா். 

இந்நிலையில் தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT