முகப்பு
இந்தியா

பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவமனையில் தீ விபத்து

பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
கோப்புப் படம்
பகிர்:

பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். 

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி லவ்பிரீத் சிங் கூறுகையில், "ஆரம்பத்தில், டிரான்ஸ்பார்மர்களில் தீ விபத்து ஏற்பட்டது.

8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்தன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.