முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

மேகாலயா: பிக்பாக்கெட் அடித்த பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்த கொடூரம்!

மேகாலயத்தில் ஜோவாய் நகரில் பெண் ஒருவர் பிக்பாக்கெட்  அடித்ததாகக் கூறி மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
கோப்புப்படம்
பகிர்:

மேகாலயத்தில் ஜோவாய் நகரில் பெண் ஒருவர் பிக்பாக்கெட்  அடித்ததாகக் கூறி மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைத்த வீடியோ  இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பெண் ஒருவர் மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஜெயந்தியா மலை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பிக்ரம் டி மரக் கூறியதாவது, ” இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை முதலே ஜோவாய் மாவட்டத்தின் மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவரது விசாரணையை தொடங்கி விட்டார். அந்த விசாரணையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →