இந்தியா

30 பயங்கரவாதிகளை விடுவித்தது பாகிஸ்தான் அரசு

DIN

இஸ்லாமாபாத்: இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தெஹ்ரிக்-இ-தலிபானை (டிடிபி) சேர்ந்த பயங்கரவாதிகள் 30 பேரை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், உயர்மட்ட தெங்ஹரிக்-இ-தலிபான் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகிறது. 

ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதாரங்களின்படி, 

முன்னாள் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு காபூலுக்குச் சென்று தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமீப மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள பின்னணியில் தடை செய்யப்பட்ட டிடிபி  உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தாண்டு மட்டும், அதிகாரிகள் உள்பட 120க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள், பெரும்பாலும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT