இந்தியா

பஞ்சாப் முதல்வரை தொலைபேசியில் அழைத்த ராஜஸ்தான் முதல்வர்: காரணம்?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிரிஹிந்த் கால்வாயின் சேதமடைந்த பகுதியைச் சரிசெய்யுமாறு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

DIN

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிரிஹிந்த் கால்வாயின் சேதமடைந்த பகுதியைச் சரிசெய்யுமாறு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

கடந்த ஏபரல் 1-ஆம் தேதி சிர்ஹிந்த் கால்வாயின் ஒரு பகுதி சேதமடைந்ததை அடுத்து ராஜஸ்தானில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கெலாட், பஞ்சாப் முதல்வருக்கு தெரியப்படுத்தினார். 

மே 21ஆம் தேதி முதல் இந்திரா காந்தி கால்வாயில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கெலாட் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆனால், கால்வாய் சேதமடைந்துள்ளதால், இப்போதைக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கொளுத்தும் கோடையில் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு ராஜஸ்தானின் 10 மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று கெலாட் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

பழுதுபார்க்கும் பணியை விரைவில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து அகற்றம்!

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT