இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

DIN

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இன்று காலை 10.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் அட்சரேகை 34.43 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 75.03 டிகிரியாக இருந்தது. இது பூமியின் 50 எம்.எஸ் ஆழத்தில் ஏற்பட்டது மற்றும் அதன் மையம் பள்ளத்தாக்கின் பந்திபோரா பகுதியிலிருந்தது. 

காஷ்மீர் அதிக உயர்திறன் கொண்ட நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால் கடந்த காலங்களில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த 2005ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT