கோப்புப்படம் 
இந்தியா

இதனால்தான் பாஜக-வில் சேர்ந்தேன்: மனம் திறக்கும் தி கிரேட் காளி

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை மீது கொண்ட ஈடுபாட்டினால் பாஜகவில் இணைந்ததாக பிரபல மல்யுத்த வீரர் தலீப் சிங் ரானா (தி கிரேட் காளி) இன்று (திங்கள்கிழமை) மனம் திறந்துள்ளார்.

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை மீது கொண்ட ஈடுபாட்டினால் பாஜகவில் இணைந்ததாக பிரபல மல்யுத்த வீரர் தலீப் சிங் ரானா (தி கிரேட் காளி) இன்று (திங்கள்கிழமை)  மனம் திறந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த பின்பு இதனை அவர் தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ நான் அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை சந்திப்பதற்காக வந்தேன். அவரும் என்னைப் போல மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர். அதன் காரணத்தினால் அவரைப் பார்க்க வந்தேன். இது ஒரு சாதாரண சந்திப்புதான்" என்றார்.

பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவர், "நான் பாஜகவில் இணைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுதான் பாஜகவில் இணைந்தேன்" என்றார்.

மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பு பாஜகவில் அவர் இணைந்து 3 மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் வாரம் ஜிதேந்திர சிங், மாநிலங்களவை உறுப்பினர் அருண் சிங், மக்களவை உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தி கிரேட் காளி மல்யுத்தப் போட்டியில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவர் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களான ஜான் சீனா, பட்டிஸ்டா, ஷான் மைக்கேல்ஸ் போன்றவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT