முகப்பு
இந்தியா

மே 28-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மே-28 (சனிக்கிழமை) குஜராத் பயணம் மேற்கொள்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி மே-28 (சனிக்கிழமை) குஜராத் பயணம் மேற்கொள்கிறார். 

நாளை காலை 10 மணியளவில் ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார். 

அதன்பிறகு மாலை 4 மணியளவில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாற்றுகிறார். அங்கு அவர் கலோலில் கட்டப்பட்ட நானோ யூரியா(திரவ) ஆலையையும் திறந்து வைக்கிறார். 

பிரதமர் வருகை தரும் மாதுஸ்ரீ கேடிபி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஸ்ரீ படேல் சேவா சமாஜால் நிர்வகிக்கப்படுகிறது. இது உயர்தர மருத்துவ உபகரணங்களுடன், பிராந்திய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கும். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →