இந்தியா

ஆந்திரத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

DIN

அனந்தபூர்: ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் 2 பேர்  படுகாயம் அடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இன்று அதிகாலை அனந்தபூரில் உள்ள முலகலேடு கிராமத்தில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்தது. இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கை தொடங்கினர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT