ஆந்திரத்தில் லாரி-மினிவேன் மோதி விபத்து: 6 பேர் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
பல்நாடு: ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நடந்த போது மினிவேனில் 39 பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்றிருந்த மினிவேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மேலும், காயமடைந்தவர்கள் குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நர்சராவ்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.