இந்தியா

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்: தெலங்கானாவில் பரபரப்பு

தெலங்கானா அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

தெலங்கானா அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் கட்சேகர் பகுதியில் நேற்று(ஞாயிறு) மாலை அரசியல் சார்பற்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தெலங்கானா தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லா ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் எழுந்து, அமைச்சரை கீழே இறங்கக் கூறி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் உரையை முடித்ததும் அமைச்சர் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம்(கான்வாய்) மீது ஒரு குழுவினர், காலணி, கற்கள், நாற்காலிகளை வீசியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அந்த கும்பலைக் கட்டுப்படுத்தி அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

கட்கேசர் காவல்துறை ஆய்வாளர் சந்திர பாபு, 'இந்த சம்பவத்தில் இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. யாராவது புகார் கொடுக்க விரும்பினால், வழக்குப்பதிவு செய்வோம்' என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தில் அங்கு நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT