ஐஆர்சிடிசி-யிடம் 5 ஆண்டுகள் போராடி 35 ரூபாயை மீட்டவர்; 3 லட்சம் பேருக்கு பயன்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகையான 53 ரூபாயை ரயில்வேயிடமிருந்து மீட்டுள்ளார்.
கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகையான 53 ரூபாயை ரயில்வேயிடமிருந்து மீட்டுள்ளார்.
இதன் மூலம், இவரைப் போல ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகையை 2.98 லட்சம் பேர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.2.43 கோடியை ரயில்வே திரும்ப செலுத்தியுள்ளது.
இது குறித்து சுவாமி கூறுகையில், ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு, முன்பதிவு செய்த தனது ரயில் டிக்கெட்டை ரத்து செய்தபோது, பிடித்தம் செய்யப்பட்ட 35 ரூபாயை திரும்பப் பெற அவர் தொடர்ந்து போராடியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் 2.43 கோடி ரூபாயை சுமார் 2.98 லட்சம் பயனாளர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.35 வீதம் பெற்றுள்ளனர்.
பிரதமர் முதல், ரயில்வே அமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் என பலரையும் டிவிட்டரில் டேக் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் ரயில் டிக்கெட்டை ரூ.765க்கு முன்பதிவு செய்து ரத்து செய்த போது தனக்கு ரூ.665 திரும்ப செலுத்தப்பட்டது. ரூ.65 பிடித்தம் செய்வதற்கு பதிலாக 35 ரூபாய் சேவை வரி என சேர்த்து ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.