முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 30 மே, 2022 at 11:14 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினா் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Advertisement

மேலும், பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.