இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு: முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெண்கள்

DIN

புது தில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளில், முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். முதலிடத்தை ஸ்ருதி ஷர்மா பிடித்துள்ளார். 

இந்த ஆண்டு வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில், முதல் மூன்று இடங்களையுமே பெண்களே பிடித்திருப்பது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அதிகளவில் பெண்களை பங்கேற்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வும், கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில், யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.  எப்போதுமே எதையுமே விட்டுவிடாத தனது மனப்பான்மையே, இன்று யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்ததாகக் கூறுகிறார்.

இவர் கடந்த முறை நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தோல்வி அடைந்தவர். ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் தேர்வெழுதி இன்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணைதயளத்தில் காணலாம்.

2022, ஜனவரியில் நடந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,824 பேர் ஏப்ரல் 5 முதல் மே 26ஆம் தேதி வரை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்களில் 685 (508 ஆண்கள் மற்றும் 177 பெண்கள்) தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால், காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாள்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT