முகப்பு
இந்தியா

குல்காமில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். 

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சம்பா பகுதியைச் சேர்ந்த ரஜினி பாலா(36). குல்காமில் உள்ள கோபால்போரா பகுதியில் ஆசிரியராக பணியாற்றிய அவர் மீது பயங்கரங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.

பலத்த காயமடைந்த பாலா அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

போலீசார் அப்பகுதியைச் சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த மே மாதத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. 

இந்த மாதத்தில் காஷ்மீரில் நடந்த ஏழாவது படுகொலை இதுவாகும். பலியானவர்களில் மூன்று காவலர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் ஆவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments