முகப்பு
இந்தியா

உ.பி. நெடுஞ்சாலையில் சாலை விபத்து: 5 பேர் பலி, பலர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்களை மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்களை மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு ஜட்டாரி மற்றும் தப்பல் இடையேயான பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

பஞ்சாபில் இருந்து வந்த தனியார் பேருந்து  திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார்கள், டெம்போக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 12 வாகனங்கள் மீது மோதியது. 

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

மதுபோதையிலிருந்த பேருந்து ஓட்டுநர் சாரதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை மோதியதில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மாவட்ட மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் தற்போது நிலையாக இருப்பதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →