புதிதாக 25 வந்தே பாரத் ரயில்கள்: அடுத்த ரயில் சென்னையிலிருந்து 
இந்தியா

புதிதாக 25 வந்தே பாரத் ரயில்கள்: அடுத்த ரயில் சென்னையிலிருந்து

இந்திய ரயில்வே வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN


இந்திய ரயில்வே வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளிக்குச் சிறந்த பயணத்தை அளிக்கும் வகையில் இயக்கப்படவிருக்கின்றன.

இந்த நிதியாண்டில் மட்டும், சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் 27 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன.  இவைகள்தான் மாடுகள் முட்டி முன்பக்கம் சேதமானவை.

மூன்றாவது வந்தே பாரத் ரயில் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாவது ரயில், சென்னை - மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இருக்கைகள் அமைக்கப்பட்ட இந்த ரயில்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், தானியங்கி விளக்குகள், கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT