இந்தியா

திருமணத்துக்கு புறம்பான உறவு: ஜீவனாம்சம் மறுப்பு!

DIN

திருமணத்துக்கு புறம்பான உறவால் விவகாரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்பாலாவை சேர்ந்த சரத், தன் மனைவி சங்கீதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், வேறு ஒருவருடன் தகாத உறவில் உள்ளதாகவும் காரணம் காட்டி மனைவிடம் விவகாரத்துக் கேட்டு அம்பாலா நீதிமன்றத்தில் சரத் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த அம்பாலா நீதிமன்றம், சங்கீதாவிடம் இருந்து சரத்துக்கு விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தது. 

விவகாரத்து ஆனதையடுத்து, சரத்தின் முன்னாள் மனைவி சங்கீதா பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகாத உறவு காரணமாக விவகாரத்து வழங்கப்பட்ட நிலையில், சங்கீதா அதைத் தொடர்ந்து கொண்டு இருப்பதை சரத் நிரூபித்தார்.

தொடர்ந்து தகாத உறவை கடைப்பிடித்து வருவதால் ஜீவனாம்சம் பெற சங்கீதாவுக்கு உரிமை இல்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT