முகப்பு
இந்தியா

கோகரன்நாத் இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவு! 

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்துவரும் நிலையில் கோலா கோகரன்நாத் தொகுதியில் வாக்குப்பதிவின் முதல் 2 மணி நேரத்தில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 3 நவம்பர், 2022 at 11:53 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்துவரும் நிலையில் கோலா கோகரன்நாத் தொகுதியில் வாக்குப்பதிவின் முதல் 2 மணி நேரத்தில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 

ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார். அதேசமயம் சில வாக்குச்சாவடி மையங்களான லாலாஹாபூர், மதன்பூர் மற்றும் லக்ஷமஞ்சதி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பாஜக கைப்பற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. 

Advertisement

இந்நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.