நண்பரின் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டை பயன்படுத்துவோருக்கு கவலைதரும் செய்தி 
இந்தியா

நண்பரின் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டை பயன்படுத்துவோருக்கு கவலைதரும் செய்தி

நண்பர்களின் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இதுவரை திரைப்படங்களைப் பார்த்து பயன்பெற்றிருப்பீர்களேயானால், அது 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் இயலாமல் போகலாம்.

DIN


நண்பர்களின் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இதுவரை திரைப்படங்களைப் பார்த்து பயன்பெற்றிருப்பீர்களேயானால், அது 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் இயலாமல் போகலாம்.

2023ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து, நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள், தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள தனியே கட்டணம் வசூலிக்கப்படவிருப்பதாக, கடந்த அக்டோபர் மாதம், அந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல் பகிர்வதைத் தடுக்கும் திட்டத்தை நெட்ஃபிளிக்ஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோது, மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில், அவ்வாறு தனது வீட்டைத் தவிர்த்து, கடவுச்சொல்லை பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடுதலாக கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தவிருப்பதாக இந்த வாரம் தெரிவித்திருந்தது.

நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களது வீட்டைத் தவிர்த்து, குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், அதற்காக இணை கணக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை, கோஸ்டா ரிகா, சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டே அறிமுகம் செய்துவிட்டது.

அதன்படி, கூடுதலாக 2.99 டாலர் கட்டணம் செலுத்தி ஒரு வாடிக்கையாளர், இரண்டு பேருடன் தனது கடவுச்சொல்லைப் பகிர்ந்து கொள்ளலாம். இதர நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT