முகப்பு
இந்தியா

குஜராத்தின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி: அரவிந்த் கேஜரிவால்

குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் காட்வியை கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
குஜராத்தின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி: அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் காட்வியை கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில், மாநில மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுத்தான், முதல்வர் வேட்பாளரை அரவிந்த் கேஜரிவால் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
முன்னதாக, முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில், இசுதான் காட்வியுடன் கட்சியின் மாநில தலைவர் கோபால் இடாலியா, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆமதாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அறிவித்த அரவிந்த் கேஜரிவால், கட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், காட்விக்கு 73 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், துவாரகா மாவட்டம் பிபாலியா கிராமத்தைச் சேர்ந்த காட்வி, ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார். 

முன்னதாக, முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்று கடந்த வாரம் கேஜரிவால் மக்களிடம் கருத்துகளை கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →