கோப்புப்படம் 
இந்தியா

மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 55 குழந்தைகள் பலி: அதிகாரப்பூர்வ தகவல்

மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் 100 பேர் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் 100 பேர் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்கள் குறித்து மாவட்ட நிர்வாக இறுதிப் பட்டியலின்படி, ஞாயிற்றுக்கிழமை பாலம் இடிந்து விழுந்ததில் 39 சிறுவர்கள் மற்றும் 16 சிறுமிகள் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 66 பேர் அல்லது பலியான பாதி பேர் மோர்பி நகரத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 44 பேர் மோர்பி கிராமப்புற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு, மோர்பி மாவட்டத்தில் மட்டும் 100 பேர் பலியாகினர். 13 பேர் ராஜ்கோட் மாவட்டத்தையும், 10 பேர் ஜாம்நகரையும், 4 பேர் கட்ச்சையும், 2 பேர் சுரேந்திரநகர், 2 பேர் தேவபூமி துவாரகா, 2 பேர் அகமதாபாத்  மற்றும் ஒருவர் ஜுனாகத் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், இவ்விபத்தில் பலியான 16 வயது சிறுவன்  மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

இவ்விபத்தில் 45 ஆண்களும், 35 பெண்களும் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT