முகப்பு
இந்தியா

கேஜிஎஃப் 2 பாடல் விவகாரம்: ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்கு

கேஜிஎஃப் 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கேஜிஎஃப் 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் இளைஞர்கள், குழந்தைகளையும் சந்தித்து உரையாடி வருகிறார். 

தற்போது அவர் தெலங்கானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் கர்நாடக மாநில நடைப்பயணத்தின்போது அவரது யாத்திரை தொடர்பான விடியோ ப்ரோமோஷன்களுக்காக கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் பாடல் இசையை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. 

மேலும் இதுதொடர்பாக கேஜிஎஃப் உரிமம் பெற்ற இசை நிறுவனம் பெங்களூரு போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →