ப.சிதம்பரம் 
இந்தியா

மோர்பி விபத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை: ப. சிதம்பரம்

குஜராத் மோர்பி  சம்பவத்துக்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

DIN

குஜராத் மோர்பி  சம்பவத்துக்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர். தொங்கு பாலத்தை சரியாக சீரமைக்காததே காரணம் என்று தனியார் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், 'இந்த சம்பவம் குஜராத்தின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்திற்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த மோசமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று இதுவரை யாரும் ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார். 

பின்னர் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டி குறித்துப் பதில் அளித்த அவர், 'தில்லியில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அங்குள்ள காற்றை சுவாசித்திருந்தால் குஜராத்தில் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாக்களிக்க மாட்டீர்கள்' என்று பதில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT