முகப்பு
இந்தியா

16 இந்தியக் கடற்படையினரை விடுவிக்க பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்!

மத்திய ஆப்ரிக்க நாடான ஈக்வடோரியல் கினியில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 இந்தியக்  கடற்படையினரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரமதர் மோடிக்கு பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பகிர்:

மத்திய ஆப்ரிக்க நாடான ஈக்வடோரியல் கினியில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 இந்தியக்  கடற்படையினரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரமதர் மோடிக்கு பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த 8-ம் தேதி கச்சா எண்ணெய் நிரப்ப வந்த நார்வேக்குச் சொந்தமான சரக்கு கப்பலான ஹீரொயிக் இடுன், கினி நாட்டைச் சேர்ந்த கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. நார்வே எண்ணெய் கப்பலில் 26 பேர் சென்றனர். இதில் 16 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். 

கப்பல் எவ்வித சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, கடற்படையினர் முன்கூட்டியே விடுவிக்கப்படுவதற்கு வசதியாக அபராதத்தைச் செலுத்த கப்பல் நிறுவனம் தயாராக இருப்பதாகவும், இந்தியக் கடற்படையினரை விடுவிக்க பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும் மத்திய அரசை அணுகி, அனைத்து இந்தியர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →