மல்லிகாா்ஜுன காா்கே 
இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பு!

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.  

DIN

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.  

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறாா். மக்கள் உடனான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடைப்பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா். 

கன்னியாகுமரியில் இருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய அவா், கேரளம், கா்நாடகம், தெலங்கானாவை தொடா்ந்து தற்போது மகாராஷ்டிராவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.  

மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனையின்(உத்தவ் தாக்கரே அணி) ஆதித்ய தாக்கரே ஆகியோர் வருகிற 11 ஆம் தேதி இந்த நடைப்பயணத்தில்  கலந்து கொள்வார்கள் என்று  அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT