நடுங்கும் இமாசலப் பிரதேசத்தையே சூடேற்றும் போஸ்டர் போர் 
இந்தியா

நடுங்கும் இமாசலப் பிரதேசத்தையே சூடேற்றும் போஸ்டர் போர்

தட்பவெப்பநிலையால் நடுங்கும் இமாசலப் பிரதேசத்துக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் காய்ச்சல் பற்றிக் கொண்டது.

DIN


தட்பவெப்பநிலையால் நடுங்கும் இமாசலப் பிரதேசத்துக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் காய்ச்சல் பற்றிக் கொண்டது.

ஒரு பக்கம், தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என களைகட்டத் தொடங்குவதற்கு முன்பே, பல இடங்களில் போஸ்டர் போர் தொடங்கிவிட்டதாம்.

மாநிலத்தின் நடு மையமாக விளங்கும் சிம்லாவின் மால் சாலைப் பகுதியின் பல இடங்களில் மிகப்பெரிய போஸ்டர்கள் நிறைந்துள்ளன.  அதிலும் குறிப்பாக அங்குள்ள பல அடுக்குமாடிகளைக் கொண்ட வணிக மையம்தான், போஸ்டர் போர் நடக்கும் களமாகவே மாறிவிட்டிருக்கிறதாம்.

ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக போஸ்டர்கள் முழுக் கட்டடத்தையும் மறைத்துக் கொண்டுள்ளன. மக்கள் இதைப் பார்த்து கட்சிகள் மீது ஆர்வம் கொள்வார்கள் என்றால், பலரும் இதைப் பார்த்து சிரித்துவிட்டுத்தான் போகிறார்களாம்.

காங்கிரஸ் வைத்திருக்கும் போஸ்டரில், காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போகிறது எனவும், பாஜக முதல்வரின் பதவியேற்கும் விழா விரைவில் என்றும் சபாஷ் சரியான போட்டி என்று சொல்லுமளவுக்கு போர் மூண்டுள்ளது.

இமாசலப் பிரதேசம் எப்போதும் அமைதியான பகுதியாக இருக்கும். தேர்தல் வந்தாலும் கூட இங்கு மேற்கு வங்கத்தைப் போலவோ, உத்தரப்பிரதேசத்தைப் போலவோ அனல்பறக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த முறை, சப்தமில்லாமல் போஸ்டர் போர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 300 கோடி வசூலித்த ஓஜி!

பாகிஸ்தானை வென்ற இந்திய மகளிர் அணி! ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது! -பாஜக

சீனாவுடன் தொடர்புடைய மியூல் கணக்கு மோசடி கும்பல் கைது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

நிலச்சரிவால் இடிந்த வீடு! 3 பேர் உயிரிழப்பு! | Darjeeling | Landslide | Rain

SCROLL FOR NEXT