முகப்பு
இந்தியா

மிசோரமில் ரூ.58 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது!

மிசோரமில் ரூ.58 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
கோப்புப் படம்
பகிர்:

மிசோரமில் ரூ.58 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மிசோரம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐஸ்வாலில் உள்ள லுவாங்முவல் பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 19.223 கிலோ எடையுள்ள 2 லட்சம் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை கைப்பற்றியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.58 கோடியாகும். ஐஸ்வாலின் லுவாங்முவல் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு, 2 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அசாமின் கரீம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஷாலிம் உதீன் (26) மற்றும் அலிகுர் ரோஹ்மான் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.